08.04.2020
கோவை மாவட்டம்
தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கோவை மாவட்ட சார்பில்
இலவச அரிசி மற்றும் காய்கறிகள் விநியோகம்
கோவைமாவட்டம் கிணத்துகடவு அருகேயுள்ள சென்றாம்பாளையம் பிரிவில் நரிக்குறவர் காலனி உள்ளது இங்கு சுமார் 50 மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்
கோரோனா நோய் தொற்று காரணமாக மத்திய மாநில அரசுகள் 21 நாள் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தியுள்ளது
இதனால் நரிக்குறவர் காலனி மக்கள் உணவு இன்றி தவித்து வந்தனர்
இதனை தொடர்ந்து கோவைமாவட்ட தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் சார்பில் மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் அங்கு சென்று ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 5 கிலோ அரிசி மற்றும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் வழங்கப்பட்டது
இதில் மாவட்ட செயலாளர் ராஜன் பொருளாளர் கார்த்திக் மற்றும் சரவணன் முத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.