பத்திரிக்கை, ஊடக செய்தி அறிக்கை.
நாள் : 08.04 2020
இடம்: மன்னார்குடி
ஊரடங்கை நீட்டிப்பதற்கு முன் விவசாயிகளுக்கு ரூ 6000ம் விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ 2000ம் உடன் வழங்குங்கள் மத்திய அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்..
இந்தியா முழுமையும் மேலும் ஏப்ரல் இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனாவை ஒழிப்புக்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது மட்டுமே மருத்துவம் என்கிற நிலையில் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் ஊரடங்கை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண் விவசாய உற்பத்திப் பொருட்களான உளுந்து, நிலக்கடலை,காய்கறி, பழ வகைகள் அடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்யும் மோசடி நடவடிக்கைகளில் வர்த்தக சூதாடிகள் ஈடுபடுவதால் உற்பத்தி பொருளை விற்பனை செய்ய முடியவில்லை.
ஆன்லைன் வர்த்தக சூதாடிகள் உணவு பொருட்களை பதுக்கி வைத்து சந்தையில் செயற்க்கையாக தட்டுபாட்டை உருவாக்கி விலையை பல மடங்கு உயர்த்தி விற்பனை செய்யும் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டடுள்ளனர். இதனால் சில்லரை வணிகர்கள் மளிகை கடைகளை மூடத் துவங்கி உள்ளனர்.
சென்னை கொத்தவால் சாவடி, மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட மிகப் பெரும் மொத்த விற்பனை சந்தைகளில் பெரும் வியாபாரிகள் அரசு, மற்றும் தனியார் கிடங்குகளில் பதுக்கி வைத்துள்ள அத்தியாவசியப் பொருட்களை வெளி கொண்டு வராவிட்டால் மிகப் பெரும் உணவு தட்டுப்பாடு ஏற்ப்படும் பேரபாயம் உள்ளது.
உற்பத்தி பொருட்கள் அழிந்துவரும் நிலையில் மறு உற்பத்திக்கு வழியில்லாமல் விவசாயிகள் நிலை குழைந்து போயுள்ளனர்.இந்நிலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கடன் வசூல் என்ற பெயரில் சொத்துக்களையும், நகைகளையும் ஏலம் விடுவதற்க்கா தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கடன் வசூல் நடவடிக்கையை உடன் தடுத்து நிறுத்த வேண்டும்.
விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கி வரும் ரூ 6000ம் திட்டத்தில் ஒரு தவணை ரூ2000 உடன் முன் பணமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு 15 தினங்கள் கடந்த நிலையில் இதுவரையில் வழங்கவில்லை. விவசாயிகளின் நிலை அறிந்து ரூ 6000த்தையும் உடன் வழங்க முன் வரவேண்டும்.
மேலும்100 நாள் வேலைத்திட்டத்தில் நாள் 1 க்கு ரூ 20 வீதம் கூடுதல் ரூ 2000ம் விவசாயத் தொழிலாளி குடும்பத்திற்கு வழங்கப்பட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது தற்போது பட்டினியால் வாடும் மக்களுக்கு பயனளிக்காது. எனவே உடன் முன் பணமாக ரூ 2000த்தை உடன் வழங்க வேண்டும்.
விவசாய உற்பத்திக்கு தேவையான உரம் உள்ளிட்ட இடு பொருட்கள் தடையின்றி வெளி மாநிலங்களிலிருந்து ரயில் மூலம் கொண்டு வருவதற்கு முயற்சிகளை மேற்க்கொள்ள வேண்டும்.
வரும் மேட்டூர் அணை நிரம்பியுள்ள நிலையில் ஜூன்12ல் குறுவை சாகுபடி செய்வதற்கு விதை, உரம் இடுப் பொருட்கள் கையியிருப்பு வைப்பது உள்ளிட்ட முன் தயாரிப்பு நடவடிக்கைகளை மேற்க்கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்.
மேற்கண்டவாறு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதனை தங்கள் ஊடகம் பத்திரிக்கையில் வெளியிட்டு உதவிட வேண்டுகிறேன்.
இவன் : என்.மணிமாறன்,
செய்தி தொடர்பாளர்